திமுக நிர்வாகியை "லூசு" எனத் திட்டிய அமைச்சர் பொன்முடி!

ம.பா.கெஜராஜ்,
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர்¢ பொன்முடி, இவர் கலந்துக் கொள்ளும் பொது நிகழ்சிகளில் பலரை அவரது பேச்சால் வாட்டி வதைப்பதை அறிந்திருக்கிறோம்.
பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்தை சுட்டிக்காட்டி ஓசி பயணம் என கிண்டல் நக்கல் செய்தது, தொகுதியில் உள்ள குறைகளை சொன்னவர்களிடம் "நீ என்ன திமுகவுக்காக ஓட்டு போட்ட.." என திட்டியது என்பதை அதில் குறிப்பிடலாம்.
அப்படியிருக்க தற்போது அவர் திமுக நிர்வாகியை "லூசு" என திட்டி ஆவேசப்பட்டிருக்கிறார்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனம் வழங்கும் நிகழச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
அதில் பேட்டரி வாகனங்களை வழங்கிய பின்னர், பேசுவதற்காக மைக்கை கேட்டார். ஆனால் மைக் வழங்கப்படாமல் இருந்துள்ளது. மேலும், மேடையும் அமைக்கபபடாமல் இருந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த பொன்முடி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த திமுக நிர்வாகியை திட்டினார். ஒருகட்டத்தில், "ஏய் லூசு" என்று திட்டினார். இதை திமுக வினர் அவ்வளவாக ரசிக்கவில்லை.