அனலை சற்று குறைத்த ஆலங்கட்டி மழை!

அனலை சற்று குறைத்த ஆலங்கட்டி மழை!

ஜி.கே.சேகரன்,
ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த  ஆலங்கட்டி மழை   100டிகிரி வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100° டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த மாதனூர் மற்றும்  சுற்றுவட்டார கிராம பகுதிகளில்   திடீரென கல் மழை பெய்தது. 
 மாலை பொழுதில்  கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த காற்றுடன் சுமார் 15 நிமிடத்திற்க்கும் மேலாக ஆலங்கட்டி மழை பெய்தது,
 இதனால் வெயிலில் வாடிய பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த ஆலங்கட்டி மழையால் சிறிது நேரம் வெப்பம் தணிந்து இதமான சூழலை அனுபவித்தனர்