இந்தியன் வங்கி சார்பில் ஃபிரிஜ் மற்றும் ஏ சி மெக்கானிக் இலவச பயிற்சி!

ம.பா.கெஜராஜ்,
இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ஃபிரிஜ் மற்றும் ஏ சி மெக்கானிக் உள்ளிட்டவைகளை இலவசமாக பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்ட்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய தொழில் முனைவோருக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசுடன் இணைந்து, சிறப்பாக செயல்பட்டு வருகின்றது.
வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அனுபவமும் திறமையும் வாய்ந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்படுகிறது. பயிற்சியோடு தொழிலுக்கான வங்கிகள் வழங்கும் சேவைகள் பற்றிய விழிப்புணர்வு, சந்தை ஆய்வு செய்தல் மற்றும் திட்ட அறிக்கை தயாரித்தல் போன்ற பயனுள்ள வாழ்வியல் திறன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் காணொளி காட்சி மூலம் (LCD Projector) செயல்முறை விளக்கங்களும், இந்நிறுவனத்தின் மூலமாக பயிற்சி பெற்றவர்களை தொடர்பு கொண்டு அவர்களுடைய தொழில் முறைகளை பற்றியும், தொழில் அனுபவங்களை பற்றியும் கருத்துக்கள் பகிரப்படுகிறது.
சீருடை, மதிய உணவு மற்றும் தேநீர், பயிற்சி நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். இத்துடன் தொழில் துவங்க வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் போன்ற இலவச சேவைகளும் வழங்கப்படுகிறது.
ற்போது ஃபிரிஜ் மற்றும் ஏ சி மெக்கானிக் பயிற்சி ( 30நாட்கள் ) துவங்க உள்ளது. பயிற்சி பெறவிருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் (27.05.2023) தேதிக்குள் விண்ணப்பிக்கவும். வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கிராமப்புற மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி (அ) கைபேசி எண்ணுடன் மேற்கண்ட தேதிக்குள் நேரிலோ(அ) அஞ்சல் அட்டை மூலம் விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, இயக்குனர், இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
NO:14, புதுப்பேட்டை ரோடு, IDBI வங்கி கிளைக்கு மேல்மாடியில், திருப்பத்தூர்-635601, 04179-299168, 9715894433 என்றஅலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.