குழந்தையில்லா 49 பெண்களுக்கு இலவச சிகிச்சை! ரூ.2 கோடி ஒதுக்கிய நாராயணி மருத்துவமனை!

குழந்தையில்லா 49 பெண்களுக்கு இலவச சிகிச்சை! ரூ.2 கோடி ஒதுக்கிய நாராயணி மருத்துவமனை!

 ஜி.கே.சேகரன்,

வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி மருத்துவமனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள திட்டம்  - 49 குழந்தையில்லா தம்பதிகளுக்கு கருத்தரிப்பு சிகிச்சை இலவசமாக அளிக்கும் திட்டத்தை அனைகட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் துவங்கி வைத்தார்.

 வேலூர் மாவட்டம், அரியூரில் உள்ள ஸ்ரீநாராயணி தங்ககோவில் நிர்வாகத்தின், நாராயணி மருத்துவமனையில் சிறப்பு திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

 நிறுவனர் சக்தி அம்மாவின் 49 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு 49 குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவசமாக  கருத்தரிப்பு சிகிச்சை அளிப்பதே அந்த திட்டத்தின் நோக்கம்.

 ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்தை இலவசமாக அளிக்க அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார்  துவங்கி வைத்தார். இதில் மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி மற்றும் மருத்துவர்கள் இதில் கலந்துகொண்டனர்

   பின்னர் மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், குழந்தையின்மைக்கான கருத்தரிப்பு சிகிச்சையை 49 தம்பதிகளுக்கு இந்த மருத்துவமனை இலவசமாக அளிக்க உள்ளது. மேலும் 49 மாணவ,மாணவிகளுக்கு நோயாளிகள் பராமரிப்புக்கான செவிலியர் கல்வி திட்டம் துவங்கி பயிற்சி அளித்து கிராமப்புறங்களில் சேவையாற்றும் திட்டத்தை துவங்கியுள்ளோம்.

  மேலும் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் மலைபகுதிகளிலும் சுகாதார முகாம்கள் குழந்தைகள் முழு உடற்பரிசோதனை, முதியோர் முழு உடற்பரிசோதனைகள் பெண்கள் முழு உடற்பரிசோதனைகளையும் இலவசமாக இம்மருத்துவமனையின் சார்பில் அளிக்கவுள்ளோம்.

 குறிப்பாக நோயாளிகளை செவிலியர் பராமரிக்கும் திட்டம் கிராமப்புறங்களில் பயனுள்ளதாக அமையும்.

 கேன்சர் ஆராய்ச்சி மையமும், மேலும் ரேடியோலஜி சிகிச்சை அளிக்கும் முறையும் இங்கு துவங்கபடவுள்ளது. காப்பீட்டு திட்டத்தில் செய்யபடும் இருதய அறுவை சிகிச்சை, கேன்சர் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகள் இங்கு செய்யபடுகிறது.

  தமிழக அரசின் உதவி 80 சதவிகிதம் கிடைப்பதில் மக்கள் பயன்பெறுகிறார்கள். மலைவாழ் மக்கள் சிகிச்சை பெறும் வசதியை ஜமுனாமரத்தூர் மலைகிராமத்தில் நாராயணி மருத்துவமனை செய்யவுள்ளது என சொன்னார்.