மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சாலை வலம்!

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு! இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சாலை வலம்!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னை: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், அக்கட்சியின் வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக மதுராந்தகத்தில் சாலை வலம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

மதுராந்தகம் தொகுதிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து முழக்கங்களை எழுப்பினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற இந்தச் சாலை வலத்தின்போது, வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக விஜய் வாக்கு சேகரித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் முதலமைச்சரின் வருகை அப்பகுதியில் அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.