18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்க பூண்டி கலைவாணன் அறிவுரை!

18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்களை புதிய வாக்காளர்களாக  சேர்க்க பூண்டி கலைவாணன் அறிவுரை!

க.பாலகுரு,

திருவாரூர் அருகே பவித்திர மாணிக்கத்தில் கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

 கூட்டத்திற்கு ஒன்றிய அவை தலைவர் டி.சோமு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சேகர் ஆர். கலியபெருமாள் வரவேற்று பேசினார். மாவட்டகழக பொருளாளர் மு.வெங்கடேசன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தாழை மு.அறிவழகன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.பாலச்சந்திரன், பேரூர் கழக செயலாளர் பூண்டி.கே.கலைவேந்தன் ஒன்றிய கழக பொருளாளர் ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை, கலைஞர் கனவு இல்லத்திற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பது குறித்து பேசினார்.  

 இந்தாண்டு கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக கொண்டாட வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவையொட்டி புதிய கொடி மேடைகள் கட்டி கொடியேற்றப்பட வேண்டும், புதிய வாக்காளர்களிடம் திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி கூற வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்களை புதிய வாக்காளர்களாக அதிக அளவில் சேர்க்க வேண்டும், வாக்குச்சாவடி சரிபார்த்தல் ....உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 புதியதாக தொழில் தொடங்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கவும் தொழில் முனைவோர்களைச் சந்தித்து புரிந்துணர் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா சென்று வெற்றி யோடு வர இருக்கின்ற திராவிட மாடல் அரசி முதல்வர் நம் தளபதி அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்,

 நடைபெற்று முடிந்த நாடாளு மன்றத் தேர்தலிய கூட்டணிக் கட்சிகளின் தலைவராகப்  பொறுப்புஏற்று சிறப்பாக வழி நடத்தி 40/40  வெற்றியை பெற்றுத் தந்த திராவிட மாடல் அரசின் முதல்வர் நம் தளபதி அவர்களுக்கும் , கூட்டணி கட்சித் தலைவர்கள்  அமைச்சர்கள். கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கிளை பொறுப்பாளர் கள், தொண்டர்கள் என அனைவருக்கு நன்றியும், பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 இந்த கூட்டத்தில்:கோவி.சந்துரு மாவட்ட பிரதிநிதி,AC.ஜெயகுமார் மாவட்ட பிரதிநிதி, S.பிரபுமாவட்ட பிரதிநிதி, ரேவதி வீரபத்திரன் ஒன்றிய கழக து.செயலாளர், M.அருணன் ஒன்றிய கழக து.செயலாளர், மு.மோகன் ஒன்றிய கழக து.செயலாளர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், சார்பு அணியினர், பாகநிலை முகவர்கள் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டுள்ளனர்.