தமிழகம் முழுவதும் கிங்டம் பேனர்களை அகற்றிய நாதகவினர்!
கு.அசோக்,
கிங்டம் படம் திரையிடப்பட்டுள்ள பல தியேட்டர்கள் அருகே நாதகவினர் களேபரத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள காட்பாடி விஷ்னு திரையரங்கத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டம் செய்து பட போஸ்டர்களை தீயிட்டு கொளுத்தினார்கள்.
வேலூர்மாவட்ட,ம்காட்பாடியில் உள்ள விஷ்னு திரையரங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைபடத்தில் ஈழத்தமிழர்களையும் தமிழ் கடவுளையும் அவமதிப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் திரையரங்கை முற்றுகையிட்டு போஸ்டரை தீயிட்டு கொளுத்தி படத்தினை தமிழகத்தில் தடை செய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த திடீர் முற்றுகை ஆர்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் சிகேசி திரையரங்கில் கிங்டம் படத்தை தடை செய்ய கோரி பேனரை அகற்றிய நாம் தமிழர் கட்சியினர்.
இயக்குனர் கௌதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து வெளிவந்த கிங்டம் கடந்த 31ஆம் தேதி கிங்டம் திரைப்படம் வெளியானது.
அந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்கள் குறித்து அவமதிக்கத்தக்க காட்சிகள் அமைந்துள்ளதாகவும் தமிழர் பண்பாட்டையும், கடவுளரையும், அவமதிக்கும் வகையில் இருக்கும் விஷயங்கள் இந்த திரைப்படத்தில் உள்ளது
எனவே இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சிகேசி திரையரங்கில் திரையிடப்பட்ட கிங்டம் படத்தை தடை விதிக்க வேண்டும் எனக் கூறி நாம் தமிழர் கட்சியினர் திரையரங்குக்கு திரண்டனர்.
இதனை அறிந்த திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி திரையரங்குக்கு சென்று நாம் தமிழர் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து திரையரங்கில் இருந்த கிங்டம் பேனரை அகற்றினர்.
இராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை டி.ஆர்.தியேட்டர் முன்பு கிங்டம் திரைடப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கிங்டம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள டி.ஆர். திரையரங்கம் முன்பு, கிங்டம் திரைப்படத்தை திரையிடக்கூடாது எனக் கூறி 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திரையரங்கம் முன்பு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழித்து எரிந்ததோடு, படத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக திரையரங்க நிர்வாகத்தினரிடம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என கோரிக்கை மனுவை அளித்தனர்.

admin
