ஒரே பர்மிட்... 150 லோடு மண் கொள்ளை! நாட்றம்பள்ளியில் விதிமீறல் குற்றச்சாட்டு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

ஒரே பர்மிட்... 150 லோடு மண் கொள்ளை! நாட்றம்பள்ளியில் விதிமீறல் குற்றச்சாட்டு – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

செய்தி.ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், விவசாய நிலங்களைச் சீரமைக்க வழங்கப்படும் மண் அள்ளும் பர்மிட் தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

30 லோடு பன்னெடுத்துக்கொள்ள பர்மிட் வழங்கினால் அதை வைத்துக் கொண்டு 150 லோடு மண்ணை கடத்துகிரார்களாம்.

இதுகுறித்து தகவல் பெற்ற செய்தியாளர்கள், செய்தி வெளியிடுவதற்கு ஏதுவாக,இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள சம்பவ இடத்துக்கு சென்றால், வட்ட அளவிலான அதிகாரி அடியாட்களை வைத்து மிரட்டுவதும், ஆபாசமாக பேசுவதும், கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்வதையும் வாடிக்கையாக கொண்டு இருக்கிறாராம்.
இதற்காகவே அவரிடம் பல அல்லக்கைகள் உள்ளனராம்.

அதேபோல்,பர்மிட் வழங்கிய பிறகும் களத்தில் கண்காணிப்பு இல்லாததால் மண் மாஃபியாக்கள் அத்துமீறுவதாகவும், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தின் செயல்பாடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மணல் மாஃபியாக்கள் சுதந்திர தினத்தன்று கூட மண் திருடி இருக்கிறார்கள். 

இதையும் வட்ட அலுவலர்கள் கண்டுகொள்ளாமல், திருட்டு மண்ணள்ளும் வாகனங்களை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் பர்மிட் விவரங்கள், அள்ளப்பட்ட மண்ணின் அளவு மற்றும் விதிமீறல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பு: இச்செய்தி பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கம் அளிக்க முன்வந்தால், அதையும் பரிசீலித்து செய்தி வெளியிடப்படும்.