திமுக வில் மேலும் 40 மா.செ.க்களா? இளைஞரணிக்கு வாய்பாமே?

ம.பா.கெஜராஜ்,
2026-சட்டப்பேரவை தேர்தலை திறம்பட சந்திப்பதற்கு ஏதுவாக திமுகவில் ஏற்கனவே ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அக்கட்சிக்கு தமிழகத்தில் 75 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அதில் மாற்றம் செய்து 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அளவில் 115 ஆக உயர்த்திட திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்த மாற்றத்தின் போது இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் மா.செ.பதவியை அடைவார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கான பட்டியலை உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.