தி.மு.க.வில் 110 மாவட்டங்கள் – முப்பெரும் விழாவில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம்!கட்சியை மேலும் வலுப்படுத்த மு.க.ஸ்டாலின் புதிய திட்டம்!

தி.மு.க.வில் 110 மாவட்டங்கள் – முப்பெரும் விழாவில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம்!கட்சியை மேலும் வலுப்படுத்த மு.க.ஸ்டாலின் புதிய திட்டம்!

செய்தி: ம.பா.கெஜராஜ்,

சென்னை: தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மறுசீரமைப்பைத் தொடர்ந்து, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து, அவர்களை கட்சியின் முப்பெரும் விழாவில் அறிமுகம் செய்ய கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

தி.மு.க.வில் இதுவரை இருந்த மாவட்ட அமைப்புகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது 110 மாவட்டங்களாக நிர்வாகப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அடிமட்ட அளவில் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பின்னர் கட்சி அமைப்பு தேர்தல் உள்ளிட்ட நடைமுறைகள் மூலம் நிரந்தர மாவட்டச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ள தி.மு.க. முப்பெரும் விழாவில் 110 மாவட்ட பொறுப்பாளர்களையும் அறிமுகம் செய்ய மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அமைப்பை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.