“வாழ்க்கையில் இணைந்தவர்கள்... மரணத்திலும் இணைந்த சோகம்!” மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழப்பு – சோளிங்கரில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

“வாழ்க்கையில் இணைந்தவர்கள்... மரணத்திலும் இணைந்த சோகம்!” மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் உயிரிழப்பு – சோளிங்கரில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

செய்தி: கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் வன்னியர் தெருவில் வசித்து வந்தவர் கணேசன் (80). இவரது மனைவி மீனா (70). இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், மீனா கடந்த முன்தினம் இரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். மனைவியின் மறைவால் மிகுந்த துயரத்தில் இருந்த கணேசன், நேற்று மதியம் திடீரென உயிரிழந்தார்.

பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த கணவன்–மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், மேல் வன்னியர் தெரு பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரது உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

கணேசன், ஆரம்ப காலகட்டம் முதலே சமூக மற்றும் அமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.

மேலும், அவர் தொடர்ந்து சமூகப் பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததாகவும் அவர்கள் கூறினர்.

கணேசனின் மறைவுத் தகவலறிந்த பாமக மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து, கணேசன் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

மனைவி உயிரிழந்த மறுநாளே கணவரும் உயிரிழந்த சம்பவம் சோளிங்கர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.