ஏழையின் வீட்டு மீது கண்வையுங்க சாமி!

ஏழையின் வீட்டு மீது கண்வையுங்க சாமி!
ஏழையின் வீட்டு மீது கண்வையுங்க சாமி!

ஆர்.ரமேஷ்,

 திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் மடவாளம் எடுத்த அம்பேத்கர் புரத்தில் வசித்து வருபவர் ஜமுனா.  தாய், தந்தை இழந்து,  ஊனமுற்ற தங்கை, பெண் குழந்தையுடன் வறுமையுடன் வாடி வருகிறார்.

 இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக, மடவாளம் கிராமத்தில் கன

மழை பெய்தது. இந்த மழையில் தான் வசித்து வந்த கூரை வீடு  சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

 ஒரு நாள் பெய்த மழைக்கே இந்த நிலைமை என்றால், இன்னும் பருவ மழைக்காலம் தொடங்கினால் அதோகதிதான்.

  இது மட்டுமின்றி, எத்தனை குடிசை வீடுகள் இப்படி இடிந்து விழுமோ என்ற அச்சமும் பதற்றமும் ஏற்படுகிறது.

  உண்மையில் தமிழகத்தில் குடிசை மாற்று வாரியம் என்று ஒன்று இருக்கிறதா? இந்த குடிசைமாற்று வாரியம் குடிசைகளை மாற்றுவதற்கா? அல்லது கோபுரங்களை உயர்த்துவதற்காக? என்ற கேள்வி எழுகிறது?

  நெக்னாமலை கிராமத்தில் ஒரு வயதான பெண்மணி மழை பெய்த காரணமாக சுவர் இடிந்து இறந்தபோன சம்பவம் அன்றைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தையே உலுக்கியது. அப்படி திருப்பத்தூர் மாவட்டத்திலும் நடந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்களா? என்று மேற்படி கிராமவாசிகள் கேள்வியெழுப்புகிறார்கள்.

   இந்த மாவட்டத்தில் கூட வருவாய் அதிகாரிகள் உள்ளனர் அல்லவா?