அரக்கோணத்தில் மாங்கனியை மூன்றாம் இடத்துக்கு தள்ளிய உதயசூரியன்!

கு.அசோக்,
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான வளர்மதி சான்றிதழை வழங்கினார்
இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜெகத் ரட்சகன் 5,63,716 வாக்குகளை பெற்றார் அதிமுக வேட்பாளர் விஜயன் 2,56,657 வாக்குகளையும், பாமக வேட்பாளர் பாலு 2,023,25, இதன் மூலம் ஜெகத் ரட்சகன் அதிமுக வேட்பாளர் விஜயனை விட 3,07059 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
அவருக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வளர்மதி சான்றிதழை வழங்கினார் உடன் கைத்தறி அமைச்சர் காந்தி உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.