கரும்பு கழிவுகள் சாலையில் கொட்டியதால் போக்குவரத்துக்கு பாதிப்பு!
கு.அசோக்,
இராணிப்பேட்டை, காரை கூட்ரோடுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் மீது கரும்பு ஆலையிலிருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரியின் பின்பக்க கதவு திடீரென திறந்ததன் காரணமாக கழிவுகள் சாலையில் கொட்டியபடியே சென்றது.
அதைப் பார்த்த சக வாகன ஓட்டிகள் லாரி ஓட்டுநருக்கு தகவலை தெரிவித்ததை தொடர்ந்து லாரியை சாலை ஓரமாக நிறுத்தப்பட்டது. கழிவுகள் கொட்டிய நிலையில் அச்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த தகவலை அறிந்து வந்த இராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சாலையில் கொட்டிய கழிவுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கழிவுகளால் வாகனங்கள் சறுக்கி விபத்துக்குள்ளாக கூடாது என சாலையில் சிதறி இருந்த கழிவுகளின் மீது தண்ணீரை பீச்சி அடித்து கழிவுகளை அப்புறப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து இராணிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

admin
