சனிக்கிழமை தமிழக அமைச்சரவை கூடுகிறது!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
தமிழக அமைச்சரவை நாளை மறுதினமான சனிக்கிழமையன்று கூடுகிறது. இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பில் காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை, ஆளுநர் செயல்பாடு, அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறையின் பார்வை குறித்து இதில் விவாதிக்க கூடும் என்றும் சொல்லப்படுகிறது
நாடாளுமன்ற கூட்டம் இன்று தொடங்கும் நிலையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.