வேலூர் மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு சிறை தண்டனை! லஞ்சம் பெற்ற வழக்கில் அதிரடி!!

வேலூர் மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு சிறை தண்டனை! லஞ்சம் பெற்ற வழக்கில் அதிரடி!!

ஜி.கே.சேகரன்,
20,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் வேலூர் மாநகராட்சி முன்னாள் ஆணையருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிப்பு -  வேலூர் நீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு வழங்கியது.

வேலூர்மாவட்டம்,வேலூர் மாநகராட்சியில் 2017-ம் ஆண்டு வேலூர் மாநகராட்சிக்கு குமார் என்பவர் ஆணையராக இருந்தார். 

அப்போது டெங்கு கொசு ஒழிப்பு  ஒப்பந்தம் எடுத்திருந்த பாலாஜி லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு புகார் அளித்தார்.

 ஒப்பந்த தொகை 10 லட்சத்து 23 ஆயிரத்தை விடுவிக்க ஆணையர் குமார் ரூ.20,000  லஞ்சம் பெற்றார் என்று புகாரில் குறிப்பிட்டார்.

ஆகவே குமார் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார்  வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர்.

 இது தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இந்நிலையில் முன்னாள் வேலூர் மாநகராட்சி ஆணையர் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.