பலகோடிகளை விழுங்கிய நியோ மேக்ஸ் அலுவலகத்தில் ஹாட்டிஸ்க் பறிமுதல்!

பலகோடிகளை விழுங்கிய நியோ மேக்ஸ் அலுவலகத்தில் ஹாட்டிஸ்க் பறிமுதல்!

க.பாலகுரு,

 பலகோடிகளை விழுங்கிய நியோ மேக்ஸ் தொடர்புடைய அலுவலகத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் சோதனை. முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்டிஸ்க் கைப்பற்றப்பட்டது.

 திருவாரூர் தெற்கு வீதியில் மதுரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான லிபர்டாஸ் நிறுவனத்தின் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்து உள்ளனர்.

  தற்போது இந்த நிறுவனம் பூட்டப்பட்ட நிலையில்,  திருவாரூர் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் பெரியய்யா தலைமையில் போலீசார் அலுவலகத்தின் பூட்டை உடைத்து  சோதனை நடத்தினர்.

  இதில் முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்டிஸ்க் கைப்பற்றப்பட்டன.

 அதனைத் தொடர்ந்து மதுரை, விருதுநகாநெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நியோ மேக்ஸுக்கு சொந்தமான 17க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு நடத்தினர். இந்த நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை மோசடி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.