தங்கமா? வெள்ளியா?  மூதாட்டியின் கழுத்து அறுப்பு!

தங்கமா? வெள்ளியா?  மூதாட்டியின் கழுத்து அறுப்பு!

ஜி.கே.சேகரன்,

ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே மூதாட்டியின் கழுத்தை அறுத்துள்ளனர்.

   திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பக்ரீத் தாக்கா பகுதியை சேர்ந்த பஞ்சு அருணாச்சலம் மனைவி முனியம்மாள் வயது 64.

 இவர் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.இந்த நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முனியம்மா வீட்டிற்கு வந்து முனியம்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து காதில் இருப்பது வெள்ளியா!  தங்கமா? என கேட்டு உள்ளார்.

 அப்போது திடீரென முனியம்மாளை கழுத்தில் அறுத்துள்ளான் அந்த மர்ம நபர். இதனால் அவர்  மயங்கி விழுந்தார். பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

  இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் முனியம்மாவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முனியம்மா சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.