கால்பந்து போட்டி எம்.எல்.ஏ.துவங்கினார் எம்.பி பரிசளித்தார்!

கு.அசோக்,
காட்பாடியில் கால்பந்து போட்டியில் முதலிடம் வென்ற காட்பாடி அணிக்கு பரிசுகள் கோப்பைகளை நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் வழங்கினார்.
வேலூர்மாவட்டம், காட்பாடியில் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் தலைமையில் கால்பந்து போட்டி நேற்றும் இன்றும் நடந்தது இதில் வேலூர், ராணிப்பேட்டை ,திருப்பத்தூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவண்ணாமலை,கன்னியாகுமரி. ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்று விளையாடின.
இரண்டாவது நாள் போட்டிகளை அனைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் துவங்கி வைத்தார். இவ்விழாவில் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கால்பந்தாட்ட போட்டியில் காட்பாடி ராயல் பிரதர்ஸ் யுனைடெட் கால்பந்து அணிக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரத்தையும், ராணிப்பேட்டை சிப்காட் சரண் கால்பந்து அணிக்கு இரண்டாவது பரிசாக ரூ.20 ஆயிரத்தையும், சென்னை ஷாடோ கால்பந்து அணிக்கு 3வது பரிசாக ரூ.15 ஆயிரத்தையும், காட்பாடி மிஷன் காம்பவுண்ட் வாரியார்ஸ் கால்பந்து அணிக்கு 4வது பரிசாக ரூ.10 ஆயிரத்தையும், கோப்பைகளையும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வழங்கினார்.