பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு! லட்சங்களில் லஞ்சம் பெற்று போலி சி.எஸ்.ஆர் வழங்கிய புகார் எதிரொலி!
ஆர்.ரமேஷ்,
கடலூர் மாவட்டம், புவனகிரி இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றிய¢ லட்சுமி என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் தொலைந்து போன பத்திரங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் தொலைந்ததாக பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று போலியான சி.எஸ்.ஆர் பதிந்து கொடுத்ததாக புகார் எழுந்தது.
சென்னை, திருப்பூர், கடலூர் போன்ற பகுதிகளில் இருந்து சிலர் இங்கு வந்து தங்களது நில பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு சி.எஸ்.ஆர் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இது போன்று நடைபெற்று வந்தது. இந்த தகவல் கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி ஜெயக்குமாருக்கு தெரியவரவே அவர் ரகசிய விசாரணை நடத்தினார். அப்போது இத்தகவல் உறுதியானது.
அதனைத்தொடர்ந்து, அவரை கடலூர் மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி விசாரணை நடைபெற்றது.
சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப் மற்றும் எஸ்பியால் நியமிக்கப்பட்ட ஒரு சில இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் புவனகிரி காவல் நிலையம் மற்றும் பல இடங்களில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது இன்ஸ் பெக்டர் லட்சுமி வழங்கிய சி.எஸ்.ஆர் ஆவணங் களை சோதனை செய்து, அதுகுறித்து விசாரித்த போது அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தது.
இதை போலீசார் கடலூர் மாவட்ட எஸ். பி. ஜெயக்குமாருக்கு அறிக்கையாக அளித்தனர்.
அதன்பேரில் எஸ்.பி.அவர்கள் விசாரணை அறிக்கையை டிஐஜிக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.

admin
