சிறுபான்மையின மாணாக்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு!

சிறுபான்மையின மாணாக்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு!

 ஆர்.ரமேஷ்,

   சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.

   தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பதினொன்றாம் வகுப்பு முதல் பி.எச்டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ  மாணவியர்களிடமிருந்து  கல்வி உதவித்தொகைக்கான விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன.

  இந்நிலையில்,  2021-22ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளிமேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் றறற.ளஉலீழடயசளாவீஜீள.பழஎ.வீஸீ  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 15.01.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  

  தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ,மாணவியர்கள் மேற்படி காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.          

    மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை கோரி மாணவ, மாணவியர்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும், தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியரின் பிண்ணப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும்,தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அறிவுறுத்தப்படுகிறது.

  பள்ளிப்படிப்பு உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2022 எனவும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.01.2022 எனவும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப.,; அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திருப்பத்தூர் மாவட்டம்.