தேவர் சமூக வாக்குகளை பெறவே விமான நிலையத்துக்கு பெயர் சூட்ட கேட்கிறார் எடப்பாடி! விசிக வன்னி அரசு கமென்ட்!

தேவர் சமூக வாக்குகளை பெறவே விமான நிலையத்துக்கு பெயர் சூட்ட கேட்கிறார் எடப்பாடி! விசிக வன்னி அரசு கமென்ட்!

ம.பா.கெஜராஜ்,   

 முத்துராமலிங்க தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து இருப்பது தேவர் சமூக வாக்குகளை கவருவதற்காக என வன்னி அரசு கமென்ட் அடித்திருக்கிறார்.

   அவர் கூறியதாவது: "மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்திருப்பது அரசியல் நோக்கத்துடனா? தென்தமிழகத்தில் தேவர் சாதி வாக்குகளை மீண்டும் அதிமுக பக்கம் ஈர்க்கும் முயற்சியா? ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை அதிமுகவில் இருந்து வெளியேற்றிய பின் தான் ஏன் இந்த கோரிக்கையை வைக்கிறார்?" என்று வன்னி அரசு சில்லியுள்ளார். .

   தேவர் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகளை கவரும் நோக்கத்துடன் இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர்.

  பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தேசிய முன்னோடி தென்தமிழகத்தில் அவருடைய சமூகத்தினர் வாக்கு வங்கி பாரம்பரியமாக அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தாலும், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவிலிருந்து விலகியதன் பின் அந்த வாக்குகள் பிளவுபட வாய்ப்புள்ளது. இதனால்தான் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை வலியுறுத்துகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

   தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான வாக்கு வங்கி அரசியல் எப்போதும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளது. குறிப்பாக தென்தமிழகத்தில் தேவர் சமூக வாக்குகள் எந்தக் கட்சிக்கு சாய்கின்றன என்பது தேர்தல் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

   இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை, தேவர் சமூகத்தின் ஆதரவைப் பெறும் 'மாஸ்டர் பிளான்' என்றே பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமாகியுள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், அண்மையில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன்கூட்டணியிலிருந்து விலகியதால், தென்தமிழகத்தில் பெரும்பான்மை சாதி வாக்குகள் அதிமுகவிலிருந்து விலகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறாது. அதை கவர்ந்திழுக்கவே விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்று பழனிச்சாமி அமித்ஷாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.