நடிகை ராதிகா விருதுநகர் வேட்பாளராம்!

நடிகை ராதிகா விருதுநகர் வேட்பாளராம்!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

 பாஜக வுடன் கூட்டணி வைத்திருக்கும்  சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், நெல்லை தொகுதியை குறிவைத்தார். ஆனால் அந்த  தொகுதி நைனார் நாகேந்திரனின் மகனுக்குத்தான் என்று பாஜக கைவிரித்து விட்டது. இதனால் விருதுநகரில் சீட் கேட்டிருக்கிறார்.

 அங்கு அவர் சார்ந்த சமூக வாக்கும், மனைவி ராதிகா சார்ந்த தெலுங்கு ஓட்டும் அதிகமாக உள்ளதால், அந்த தொகுதி வேண்டும் என்றார். ஆனால் அதே தொகுதியில்  பாஜகவின் ராமசீனிவாசன் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கான வேலைகளையும் தொடங்கியிருந்தார். கடைசியில் கூட்டணியில் சரத்குமார் சேர்ந்ததால், அவரது மனைவி ராதிகாவை அங்கு நிறுத்த முடிவு செய்துள்ளார்.

 இதனால் ஒரு வாரமாக ராமசீனிவாசன் அப்செட் ஆகியிருக்கிறாராம்.