சாலையில் எரிந்த கார்!
க.பாலகுரு,
திருத்துறைப்பூண்டி திருவாரூர் பைபாஸ் சாலையில் தடுப்பு சுவரில் கார் மோதி எரிந்ததில் ஒருவர் உடல் கருகி உயிரிழப்பு .
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாகை பைபாஸ் சாலையில் விடியற்காலையில் சொகுசு கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்ததில் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது.
அதில் டிரைவர் காரில் எரிந்து உடல் கருகி உயிரிழந்தார் . உடனடியாக அப்பகுதி வழியாக சென்றவர்கள் திருத்துறைப்பூண்டி காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன்.

அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். மேலும் எரிந்த நிலையில் இருந்த உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தது என்பதும் திருவாரூர் மளிகை கடை உரிமையாளர் மகன் ரபீக் திருமணம் ஆகி 5 மாதம் ஆன நிலையில் புதுக்கோட்டையில் உள்ள தனது மனைவியை பார்த்துவிட்டு திரும்பும் வழியில் விபத்து ஏற்பட்டு உயிரிலந்துள்ளார் என்று கண்டறியப்பட்டது.

admin
