“இன்ஸ்பெக்டர்களை ஆபாசமாக திட்டும் IPS அதிகாரி!” கண்கலங்கும் காவல் ஆய்வாளர்கள்!

“இன்ஸ்பெக்டர்களை ஆபாசமாக திட்டும் IPS அதிகாரி!” கண்கலங்கும் காவல் ஆய்வாளர்கள்!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னைக்கு அடுத்து உள்ள வெயிலுரின் தலைமையக உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் இளம் IPS அதிகாரி ஒருவர், தனக்கு கீழ் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களிடம் ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவதாக கூறப்படுகிறது. 

இந்த குற்றச்சாட்டு காவல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று செப்டம்பர் 11, காலை சுமார் 11 மணியளவில், புகார் ஒன்றின் தொடர்பாக ஒரு செய்தியாளர் முக்கிய காவல் ஆய்வாளர் ஒருவரை சந்திக்கச் சென்றுள்ளார்.

அப்போது அந்த ஆய்வாளர் கண்கள் கலங்கிய நிலையில் இருந்ததாகவும், என்ன பிரச்சினை என்று செய்தியாளர் கேட்டபோது தனது வேதனையை வெளிப்படுத்தியதாகவும் தெரிகிறது.

“இந்த உத்தியோகத்திற்கு வந்ததே தவறா? நேற்று வந்த அதிகாரி என்னை ‘பாஸ்டர்டு’ என்று திட்டுகிறார்.

 இப்படி தரக்குறைவாக திட்டுவது நியாயமா? என்னை மட்டும் அல்ல... பல இன்ஸ்பெக்டர்களிடமும் இதேபோல பேசுகிறார்” என்று அந்த ஆய்வாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

மேலும், தன்னை ஒருமுறை அல்ல, மூன்று முறை அந்த வார்த்தையைப் பயன்படுத்தி திட்டியதாகவும் அவர் வேதனைப்பட்டிருக்கிறார்.

ஒரு காவல் ஆய்வாளர் தனது உயர் அதிகாரியின் அணுகுமுறையால் மனம் உடைந்து கண்கலங்கும் நிலை ஏற்பட்டிருந்தால், அந்தத் துறையின் பணிச்சூழல் எப்படி இருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

பணியில் தவறு இருந்தால் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுப்பது உயர் அதிகாரியின் உரிமை.

ஆனால், கீழ்நிலை அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்து உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அம்மாவட்ட காவல் துறையினரிடையே கருத்து நிலவுகிறது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட சரக உயர் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, காவல் ஆய்வாளர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே காவல் வட்டாரங்களில் எழுந்துள்ள எதிர்பார்ப்பாக உள்ளது.