டமார் என்ற வெடி சத்தம்,,,பதறிய குடும்பத்தினர்!

டமார் என்ற வெடி சத்தம்,,,பதறிய குடும்பத்தினர்!

 கு.அசோக்,

 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா தார்வழி கூட்ரோடு சாலையில் உள்ள சிகாமணி என்பவர்  ரைஸ் மில் வைத்து நடத்தி வருகிறார், அவரது மனைவி இந்திராணியுடன் வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது டமார் என்கிற வெடி சத்தம் போன்று எழுந்தது. அப்போது  வீட்டிலிருந்த ஃப்ரிட்ஜ்  வெடித்து தீப்பிடித்து எரிய துவங்கியது.

  அதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிகாமணி  அணைக்க முயற்சித்துள்ளார். ஆனால்  தீ பரவி எரியத் துவங்கியதால்  உடனடியாக இருவரும் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

  பின்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர்  தீயை அணைத்தனர்.

  இருப்பினும் பிரிட்ஜ் முழுவதுமாக எரிந்து நாசம் ஆனதுமேலும் தீ வீடு முழுவதும் பரவாமல் கட்டுப்படுத்தினர்இந்த சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 முதல் கட்ட விசாரணையில் வீட்டிலிருந்த பிரிட்ஜில் அதிக மின்னழுத்தம் வந்ததன் காரணமாக பிடித்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது