13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கையாம்! சொல்லியவர் வேலூர் எம்.பி!
கு.அசோக்,
வேலூர் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை - மத்திய அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு சென்றடைய கையேடுகளை வெளியிட வேண்டும் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பேட்டி
வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரயில்வே ஆலோசனை கூட்டம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதே போல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டமும் இரண்டு கூட்டங்கள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி சட்டமன்ற உறுப்பினர்கள் வில்வநாதன்,அமுலு,மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு,உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் ரயில்வேதுறை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனா.¢
பின்னர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில் மத்திய மாநில அரசு திட்டங்களில் என்ன நடக்கிறது என்பது தான் திஷா கமிட்டி கூட்டம் இது. வேலூர் மாவட்டத்தில் நடக்கும் அனைத்து பணிகளும் ஆலோசிக்கப்பட்டது.
விவசாயத்திற்கு அரசாங்கம் செலவழிக்கும் பணம் கடைகோடி விவசாயிகளுக்கு செல்கிறதா என கடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அவர்களுக்கு கையேடுகள் வழங்க வேண்டுமென கொள்கை முடிவு செய்யப்பட்டது, விவசாயிகளுக்கு அத்தனை திட்டங்களும் பதிவு செய்யப்பட்டது. அக்கையேடுகளை விவசாயிகளுக்கு கொடுத்துள்ளனர். திட்டங்கள் கண்டிப்பாக விவசாயிகளுக்கு சென்றடையும் என திடமாக நம்பும் வகையில் உள்ளது.
சாலை வசதி குடிநீர் பிரச்சணை ரேஷன் பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது அனைத்தும் திருப்திகரமாக உள்ளது சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம், அந்த ஆலோசனை கண்டிப்பாக கடைபிடிக்கபடும் வேலூர் மாவட்டத்தில் முக்கிய பிரச்சணை குப்பைகளை கையாண்டு திடக்கழிவு மேலாண்மை செய்வது தான்.
அதற்காக ஒவ்வொரு பேரூராட்சியிலும் இடங்களை தேர்வு செய்ய வேண்டும் அப்படி செய்து மத்திய அரசின் நிதியுதவியோடு திட்டகழிவு மறுசுழற்சி செய்து வேலூர் மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கபடும்.
வேலூரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஒரு பைபாஸ் சாலை ரூ.,700 கோடியில் கொண்டு வர ஆக்கபணிகள் நடக்கிறது அதே போல் வடுகந்தாங்கல் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதிகளில் பைபாஸ் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் மாநில பட்ஜெட்டில் நமது மாவட்ட கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார். கேவிக்குப்பம் சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக்கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார். அத்தனையும் கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பதில் இம்மாவட்டம் முன் மாதிரியாக உள்ளது.
அம்ரூத் திட்டத்தில் 11 தண்ணீர் டேங்குகள் பய்ன்பாட்டிற்கு கொண்டு வர போன் திஷா கூட்டத்தில் முடிவு செய்தோம் அது தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது அதனை உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆய்வு செய்வோம்.
மேலும் ரயில்வே கமிட்டி கூட்டத்தில் காட்பாடி முதல் திருப்பத்தூர் மாவட்டம் வரையில் ரயில்வே கேட்டுகளை மூடி மேம்பாலம் அமைக்கப்படும் வசந்தபுரம் பகுதியில் ரயில்வே கேட் மூடப்பட்டு ரயில்வே சுரங்கபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லத்தேரி வடுகந்தாங்கல் மற்றும் குடியாத்தத்திலும் மூன்று மேம்பாலம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது அத்தனை பகுதிகளிலும் மேம்பாலம் சுரங்கபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்பாடி கூடுதல் ரயில்வே மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசும் ஒப்புதல் தந்துவிட்டது அங்கு முக்கிய ரயில் செல்லும் மின் பாதை உள்ளதால் அரக்கோணம் பால பணிகள் முடிவடைந்த பிறகு காட்பாடி கூடுதல் ரயில்வே மேம்பாலம் பணிகள் துவங்கும் என்று சொன்னார்.

admin
