தேனி தொகுதியில் போட்டியிடப்போவது டிடிவி.தினகரனா... ஓ.பி.எஸ்.மகனா?

கே.ஏ.ஜெகதீஸ்வரி,
நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் போட்டியிடப் போவது டிடிவி.தினகரனா ஓ.பி.எஸ்.மகனா என்கிற பேச்சு எழுந்துள்ளது. அதேநேரத்தில், தேனி தொகுதியின் தற்போதைய எம்பி ஆன ஓபிஎஸின் மூத்த மகன் ரவீந்திரநாத் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டால் தேறுவது கடினம் என்பதால் அவர் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஓபிஎஸ் இளைய மகன் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சொல்கிறார்கள்.
அதே நேரத்தில் தேனி தொகுதியில் போட்டியிட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜக கூட்டணியில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தேனி தொகுதியை தற்போதே டிடிவி தினகரன் குறி வைத்து ஓபிஎஸ் மகனுக்கு செக் வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.
இன்னும் தேர்தல் அறிவிப்பும் இல்லை, கூட்டணியும் உறுதியாக இல்லாத நிலையில் அதற்குள் தேனி தொகுதியில் போட்டியிடுவது குறித்து இரு தரப்பினர் ஆலோசித்து வருவது பரபரப்பைமுண்டாக்கியிருக்கிறது.