கன்டெய்னர் லாரியில் நூதனமாக கஞ்சா கடத்தல்!

கன்டெய்னர் லாரியில் நூதனமாக கஞ்சா கடத்தல்!

ஜி.கே.சேகரன்,

குடியாத்தம் அருகே கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா பறிமுதல்- லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

  வேலூர் மாவட்டம், குடியாத்தம், பரதராமி தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் பரதராமி போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக விசாகப்பட்டினத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு பெவிக்கால் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 40 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.

 போலீசார் லாரியில் வந்த இருவரிடம் தீவர விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த  பாபு(32) ஓட்டுநர் என்பதும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(25) கிளீனர் என்பதும் தெரிய வந்தது.

 மேலும் இவர்கள் விசாகப்பட்டினத்தில்  இருந்து வரும் போது முன் பின் தெரியாத நபர் ஒருவர் இந்த 40 கிலோ கஞ்சா பொட்டலங்களை அவர்களிடம் கொடுத்து இதை குடியாத்தம் அருகே சென்னையைச் சேர்ந்த ஒருவர் பெற்றுக் கொள்வதாகவும் அதற்காக அவர்களுக்கு 25 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும் சொன்னதாக விசாரணையில் தெரியவந்தது.

  பின்னர், சென்னையை சேர்ந்த நபருக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

   மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 40 கிலோ கஞ்சா மற்றும் கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்து பரதராமி போலீசார் கைது செய்தனர்.

 தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரியில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வருவதும் தமிழக ஆந்திர எல்லை பகுதியில் வாகனத்தணிக்கையில் கஞ்சா பிடிபடுவதும் தொடர்கதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.