வேலூரில் கார்கள் பற்றி எரிந்தது! காரணம் என்ன?!
கு.அசோக்,
வேலூரில் திடீரென சாலையில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு.காரில் வந்த தம்பதியினர் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினர்.
வேலூர் மாவட்டம் கரசமங்கலத்தைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி (வயது 33). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.ரமலான் நோன்பு காரணமாக இவர் தனது மனைவியுடன் வேலூருக்கு சாப்பிடுவதற்காக தனது காரில் வந்துள்ளார்.
இரவு 11.45 மணி அளவில் வேலூர் பேலஸ் கஃபே சந்திப்பு காமராஜர் சிலை அருகே கார் வந்து கொண்டிருந்த போது காரின் முன் பக்கத்தில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காரை ஒட்டி வந்த தமீம் அன்சாரிக்கு தகவல் சொல்லி உள்ளனர்.
அப்போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென தீ பிடித்து மளமளவென எரிய தொடங்கியது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தமீம் அன்சாரி காரை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு தனது மனைவியுடன் காரில் இருந்து அவசரமாக இறங்கி வெளியேறினார்.
கார் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. தொடர்ந்து இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல் கார் ஷெட்டில் திடீர் தீவிபத்து பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த மூன்று கார்கள் எரிந்து நாசமட்ய்ந்தது.
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ப்ளூ கார்ஸ் என்ற சையத் அமீர்,முகமது ரகீம் ஆகியோர்களுக்கு சொந்தமான கார்கள் பழுதுபார்க்கும் ப்ளுகார்ஸ் மையம் உள்ளது இதில் ஒரு ஆடிகார் ஒரு எம்.ஐ கார் மற்றம் ஹுண்டாய் கார்கள் பழுதுபார்க்க நிறுத்தப்பட்டிருந்தது.
மூடப்பட்ட்ட கடையிலிருந்து புகை வந்ததால் மக்கள் தகவல் கொடுத்தனர் அப்போது மூன்று கார்களும் தீப்பற்றி எரிந்தது வேலூர் தீயணைப்புத்துறையினர் இரண்டு தீயணைப்பு வண்டிகளில் வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.
சம்பவ இடத்தில் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் நேரில் வந்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
வேலூரில் நள்ளிரவு காட்பாடி சாலையில் ஒரு கார் தீபற்றி எரிந்த நிலையில் கார் ஷெட்டில் அடுத்தடுத்து விலை உயர்ந்த மூன்று கார்கள் தீப்பற்றி எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

admin
