குழந்தையின் இதய ஷார்ட் சர்க்யூட்டை நீக்கி சிஎம்சி மருத்துவமனை சாதனை!

குழந்தையின் இதய ஷார்ட் சர்க்யூட்டை நீக்கி சிஎம்சி மருத்துவமனை சாதனை!

ம.பா.கெஜராஜ்,

இந்தியாவிலேயே முதல் முறையாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு 4 வயது சிறுமிக்கு ரேடியோ அலைவரிசை சிகிச்சை செய்திருக்கிறார்கள்.

(RF Ablation) செயல்முறையை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 2 வருடங்களாக அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த குழந்தையின் நோய்க்கு தீர்வு ஏற்பட்டிருக்கிறது.

 இந்த சிகிச்சைக்கு முன்னதாக குழந்தைக்கு மிக வேகமாக இதயத் துடிப்பு (சுமார் 250/நிமிடத்திற்கு) ஏற்படும் நிலை இருந்தன.

   இதன் விளைவாக மயக்கம் மற்றும் வாந்தி அடிக்கடி ஏற்பட்டது. பல்வேறு மருந்துகளை அதிக அளவில் எடுத்துக்கொண்டு, பல மருத்துவமனைகளில் கார்டியோவேர்ஷன் (இதயத்தில் மின் அதிர்ச்சி) கொடுக்கப்பட்ட போதிலும், சிறுமிக்கு தொடர்ந்து அறிகுறிகளுடன் காணப்பட்டது.

  இந்நிலையில் குழந்தையில் இதயத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட்டை சிஎம்சி மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றி சாதனைபடைத்துள்ளார்கள்.

    இனி எந்த மருந்தும் தேவைப்படாமல் குழந்தை இயல்பு வாழ்க்கையை நடத்த முடியும் என்று அம்மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தனை சிறிய நோயாளிக்கு இதுவரை இத்தகைய சிகிச்சை இந்தியாவில் நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்பது நினைவில் கொள்ளக்கூடியது ஆகும்.