சகோதரர்களுக்கு ஒரே எண் கொண்ட ஆதார் அட்டை! 7 ஆண்டுகளாக திரிந்தும் திருத்தியபாடில்லை!

சகோதரர்களுக்கு ஒரே எண் கொண்ட ஆதார் அட்டை! 7 ஆண்டுகளாக திரிந்தும் திருத்தியபாடில்லை!

ஜி.கே.சேகரன்,

எனக்கும் எங்க அண்ணனுக்கும் ஒரே ஆதார் எண் இருப்பதாகவும், அதை தயவு செய்து மாற்றி கொடுங்க என்று கலெக்டரிடம் சகோதரர்கள் மனு அளித்தனர்.

   திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்த மாதவன் மகன்கள் ஜெய்சங்கர் மற்றும் துரை.  அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே ஆதார் உள்ளது. இதனை மாற்றி தர வேண்டும் என ஏழு ஆண்டுகளாக பல்வேறு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்துள்ளார்.

  மேலும் அண்ணன் தம்பி இருவருக்கும்  ஒரே ஆதார் எண் கொண்டுள்ளதால் அரசு சலுகைகள் மற்றும் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் பல இழப்பை சந்தித்து வருகின்றனர்.

  இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தங்களது ஆதார் எண்ணை மாற்றி தர வேண்டும் என மனு அளித்தனர்.

 அப்போது ஆதார் அட்டை பெறப்பட்டதிலிருந்து தற்போது வரை எண்ணை மாற்ற முடியாமல் பல்வேறு அலுவலகங்களுக்கு நடையை நடப்பதாக ஆதங்கம் தெரிவித்தனர்

 அநேகமாக இந்தியாவிலேயே இந்த வித்தியாச பிரச்சனை திருப்பத்தூரில் தான் ஏற்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.