பாகிஸ்தானை ஆதரித்த அசாம் எம்.எல்.ஏ.அதிரடி கைது!

பாகிஸ்தானை ஆதரித்த அசாம் எம்.எல்.ஏ.அதிரடி கைது!

ஷெரிப்பாஷா,

 பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து உள்ளது.

 அப்படியிருக்க அசாமின் எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அமினுல் இஸ்லாம், பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து இறையான்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசி உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை, பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து , வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

 இதை விமர்சித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக அசாம் எதிர்கட்சியான ஏஐயுடிஎஃப் எம்எல்ஏ அமினுல்  கருத்து தெரிவித்தார்.

   இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா, "நாங்கள் அவர் பேசும் வீடியோவை பார்த்தோம். தாக்குதலில் பாகிஸ்தான் உடந்தையை மறைத்து பாதுகாக்கும் வகையில் பேசியிருந்தார். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் பேசினாலும் எனது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்தார்.

  அதனைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஏஐயுடிஎஃப் கட்சி தலைவர் பத்ருதீன் அஜ்மல் கூறுகையில், "எம்எல்ஏவின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை. பயங்கரவாதத்துக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை.அந்த பயங்கரவாதிகள் இஸ்லாம் மதத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.

   இதனைத்தொடர்ந்து அந்த "எம்எல்ஏ" கைது செய்யப்பட்டார்.