ரூ.100 கோடி தனியார் பள்ளி முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை!
ரூ.100 கோடி தனியார் பள்ளி முறைகேடு புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு சோதனை!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
அந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி இல்லம் உள்ளிட்ட இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புகாரின்படி, சாலிகிராமத்தில் ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’ என்ற பெயரில் செயல்பட்டதாகக் கூறப்படும் பி.டி.அரசகுமார், தனக்கு அரசியல் மற்றும் அதிகார தொடர்புகள் இருப்பதாகக் கூறி கொண்டிருந்தார்.,
அதேபோல்,தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை 177 தனியார் பள்ளிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டதாகவும், வழக்கு தொடர்பாக 250-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் தொடர்ச்சியாக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள வீடு மற்றும் அவருடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனை மற்றும் வழக்கு தொடர்பாக அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகள் வெளியாகியுள்ளன.
சோதனை முடிந்த பின்னர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
இதேபோல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சோதனை குறித்து அரசியல் பழிவாங்கல் என குற்றம்சாட்டியுள்ளார்.
இவை அவர்களது அரசியல் நிலைப்பாடுகளாகும்.வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் பங்கு குறித்து போலீஸ் விசாரணையின் முடிவிலேயே முழுமையான விவரங்கள் தெரியவரும்.
இந்த சோதனையின் போது அன்பில் பொய்யா மொழி மகேஷ் வீட்டிற்கு முன்னாள் அமைச்சர் நேரு தன் பரிவாரங்களுடன் பந்தாவாக சென்றார்.
அப்பொழுது அவரை அந்த வீட்டில் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனிடையே மகேஷ் நேருவிடம் தொலைபேசியில் பேசினார்.

admin
