காணொளியில் மைதானம் திறப்பு!

காணொளியில் மைதானம் திறப்பு!

ஜி.கே.சேகரன்,

  வாணியம்பாடி சிறு உள் விளையாட்டு மைதானம் துணை முதல்வர் காணொளி மூலம் திறப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள்.

   திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியிலிருந்து 50 லட்சம் மதிப்பில் சிறு உள் விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றன.

  இது துணை முதலமைச்சர் காணொளி மூலமாக திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வருவாய் மாவட்ட வருவாய் திட்ட அலுவலர் நாராயணன் தலைமை தாங்கினார்.

  முன்னிலை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் மற்றும் ஆலாங்கய ஒன்றிய குழு தலைவர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

  நிகழ்ச்சியில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கால்பந்து விளையாட்டு கிரவுண்ட் ஃபுட்பால் வாலிபால் ஆக்கி உயரம் தாண்டுதல் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு திடல் அமைக்கப்பட்ட உள்ளன.

  இதில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்காக உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளன இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட திட்ட அலுவலர் பேசும்போது கூறினார் இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன இதில் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்