டாஸ்மாக் காலி பாட்டிலுக்கு ரூ.10 திருப்பித் தருவதில் புதிய சர்ச்சை – ரூ.5 மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார்!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பல ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டும், பலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
இந்தச் சூழலில், டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 திருப்பித் தருவதற்குப் பதிலாக, சில கடைகளில் ரூ.5 மட்டுமே வழங்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும்போது நுகர்வோருக்கு முழுமையாக ரூ.10 வழங்க வேண்டும் என்பதே நடைமுறை.
ஆனால் சில கடைகளில் ரூ.5 மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறப்படுவதால், மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தகராறுகள் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே டாஸ்மாக் நிர்வாகத்தில் காலி பாட்டில்களுக்கான பணம் திரும்ப வழங்குவது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது ரூ.5 விவகாரமும் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையில் அரசு அறிவித்துள்ள முழுத் தொகையும் நுகர்வோருக்குக் கிடைக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்பதே மதுப்பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
