புத்தகம் கொடுங்க! பூங்கொத்தை தவிருங்கள்! எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!

உ.சசிகுமார்,
கருத்தாழமிக்க புத்தகம் கொடுங்க! பூங்கொத்தை தவிருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அவர்,கூறியிருப்பதாவது, என்னை நேரில் சந்திக்க வரும் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும், போதும், நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கும்போதும், என்மீது கொண்ட பேரன்பின் காரணமாக பூங்கொத்து வழங்குவதை, வரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
முடிந்தால் கருத்தாழமிக்க புத்தகங்களை மட்டும் வழங்கினால், மகிழ்ச்சி அடைவேன். இந்த அன்பு வேண்டுகோளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.