பிளிப்கார்ட் மூலம் சிக்கிய கள்ள நோட்டு கும்பல்!மேற்கு வங்கத்திலிருந்து குடியாத்தம் உள்ளிட்ட பகுதியில் புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது! வேலூரிலும் நடமாட்டமா?!
ம.பா கெஜராஜ்,
வேலூர் மாவட்டம், குடியாத்தம், அடுத்த கள்ளூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரபீக் அகமது வயது 46 தரணம்பேட்டை பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்
சில தினங்களுக்கு முன்பு ரபீக்அகமது ப்ளிப்கார்ட்டில் பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது பொருளை டெலிவரி செய்யும் போது டெலிவரி செய்தவரிடம் ரபீக்அகமது 500 ரூபாய் நோட்டு இரண்டை கொடுத்துள்ளார்.
அந்த 500 ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் ஏற்பட்ட பிளிப்கார்ட் டெலிவரி பாய் குடியாத்தம் காவல் துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது வேலூர் சரக டிஐஜி மகேஷ் உத்தரவின் பெயரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சிவராமன் மேற்பார்வையில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சிஐடி சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன்,ஏட்டு தினகரன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை தீவிர விசாரணை நடத்தினர்
விசாரணையை தொடர்ந்து ரபீக் அகமது இடம் விசாரணை நடத்தினர் தொடர்ந்து அவரிடம் 500 ரூபாய் தாள்களாக 50 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் விசாரணை மேற்கொண்டதில் குடியாத்தம் தங்கம் நகர் பாரதியார் தெருவில் வசிக்கும் ஜூபேர் அகமது வயது 52 என்பவரிடம் கள்ள நோட்டு வாங்கியதாக தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் ஜுபேர் அகமதுவை கைது செய்து அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில்,
ஆம்பூர் அடுத்த உடைய ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பகுதியைச் சேர்ந்த கோபால் வயது 47 என்பவரும், பேரணாம்பட்டு அடுத்த டி.டி. மோட்டூர் அண்ணா நகர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் வயது 48 என்பவரும் கள்ள நோட்டுகள் கொடுத்ததாக ஜுபேர் அகமது கொடுத்த தகவலின் பெயரில் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 50 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர்.
கோபால் மற்றும் காமராஜ் இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் ஆம்பூர் எஸ்.கே.ரோடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாபு வயது 65 என்பவர்தான் கள்ள நோட்டுகள் கொடுத்ததாக தகவல் தெரிவித்ததை தொடர்ந்து பாபு என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 30 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் பாபு என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்க மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் கள்ள நோட்டு வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்று வந்ததும்
மேற்கு வங்கத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக சென்று வரும்போது பல கள்ள நோட்டு கும்பலிடம் தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் கள்ள நோட்டுகளை வாங்கி வந்து குடியாத்தம்,பேரணாம்பட்டு, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் புழக்கத்தில் விட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
அதன் பெயரில் குடியாத்தம் போலீசார் மேற்கு வங்கத்தில் பாபுவிற்கு யார் கள்ள நோட்டு விநியோகம் செய்தது என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் போலீசார் ரபீக் அகமது,ஜுபேர் அகமது,கோபால்,காமராஜ்,பாபு ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 1.50 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து பாபுவை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிளிப்கார்ட் டெலிவரி பாய் கொடுத்த தகவலின் பெயரில் கள்ள நோட்டு புழக்கத்தில் விட்ட ஐந்து பேரை கைது செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பு: வேலூரில் சிகிச்சை உள்ளிட்ட காரணங்களை காட்டி மேற்கு வங்கத்தினர் ஆயிரக்கணக்காக தங்கி இருக்கின்றனர்.
இவர்கள் மூலமாகவும் இந்த கள்ள நோட்டுப் புழக்கம் வேலூர் மற்றும் தமிழகமெங்கும் பரவலாக புழக்கத்தில் இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
அதேபோல பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஒருத்தர் அவருடைய மூதாதையர் காலத்தில் இங்கு வந்து கடை விரித்துக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தகவல்…. விசாரணை செய்தால் நலம்.
உடைய ராஜபாளையம்
அதேபோல் ஆம்பூருக்கும் மாதனுருக்கும் இடையே உள்ள உடைய ராஜபாளையம் கிராமம் ஆனது மர்மம் நிறைந்த பகுதியாகும். இங்கிருந்து இந்தியா முழுக்க சென்று பலர் பல்வேறு இல்லீகல் வேலைகளை செய்து வருவதாக பலரும் அறிவர். இவர்களுக்கு சில வட இந்தியர்களும் துணை.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, மேற்குவங்கம் போன்ற இடங்களில் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் இந்த நபர்கள் அங்கிருந்து செயல்பட்டு வரும் இல்லீகல் பிசினஸ் மூலமாக கோடிக்கணக்கான பணத்தைக் சம்பாதித்து கிராமம் முழுக்க மாட மாளிகையாக வசதியுடன் உள்ளனர்.

admin
