கோவை குருபரன் இல்ல திருமண விழா!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
கோவையில் பிரபல பஸ் டீலரான ஏ.ஜி.குருபரன் மற்றும் திருமதி ரோஸ்லின் குருபரன் அவர்களின் இளைய குமாரன் திருநிறை செல்வன் ஜி.ஷிவேக் குருபரன் பி.இ., எம்.பி.ஏ.(யுஎஸ்ஏ) -க்கும் பி.சரவணக்குமார் மற்றும் திருமதி எஸ்.ஜெயந்தி அவர்களின் குமார்த்தி திருநிறை செல்வி ஸ்ரீதேவி (எ) எஸ்.சிவராகவி பிடெக், எப்.பி.இ. க்கும் இன்று 05.04.2023 ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30.மணிக்குள் திருமணம் இனிதே நடைபெற்றது.
கோவை, முல்லை நகர், பி.எம்.புதூரில் உள்ள ஸ்ரீபூமி நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த திருமணம் மங்கள வாத்தியம் முழங்க கடவுள் அருளாலும், பெரியோர் ஆசிர்வாதங்களுடன் நடந்தது.
இந்நிலையில், பிற்பகல் 11.00 மணிக்கு ஆர்.எஸ்.புரம், ஸ்ரீஅன்னபூர்னா ஸ்ரீகௌரி சங்கர் ஹோட்டல் கலையரங்கில் திருமண வரவேறுப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மணமக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று, சீறும்... சிறப்புமாய், ஆரோக்யத்துடன் நீண்ட் ஆயுட்காலம் வாழ அனைவரும் வாழ்த்தினர்.