கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ஜே.அருண் ஹென்றிக்ஸ்,
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 18ம் தேதி கோவை வருகிறார்.அரசு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக காலை 9.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகிறார்.
பின்னர் நிகழ்ச்சி முடிந்து மதியம் 2.10 மணிக்கு மீண்டும் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.
இதற்கிடையே கோவையில் அமைய உள்ள செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், ரூ.115 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தை திறந்து வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து எஸ்.என்.ஆர் அரங்கத்தில் மக்களோடு முதல்வர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
கோவைக்கு முதலமைச்சர் வருகையை ஒட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.