நானா பாலியல் தொழிலாளி? நடிகை விஜயலஷ்மி மனவருத்தம்!

நானா பாலியல் தொழிலாளி? நடிகை விஜயலஷ்மி மனவருத்தம்!

கே.ஏ.ஜெகதீஸ்வரி,

என் மீது புகார் கொடுத்துள்ள விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. என்னை பாலியல் குற்றவாளி என்று அவமானப் படுத்துகிறார்கள் என சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.   அப்போது அவர் கூறியதாவது:

  தூத்துக்குடி விமானநிலையத்தில் சீமான் பேட்டி யளிக்கையில்,"விஜயலட்சுமி நான் பாலியல் தொழிலாளியா என்று கேட்டுள்ளார். எனக்கு முன்னாடி இதே மாதிரி நாலைந்து பேரிடம் பழகுவது, அதற்குப் பின்பு வெளியே போய் வம்படியாக வழக்கு தொடுப்பது, மிரட்டி பணம் கேட்பது என்று இருந்தால் அதற்கு பேர் என்ன?. அதிகபட்சம் அவர் வைத்த கோரிக்கை எங்கண்ணனிடம் போய் மாசம் ரூ.30 ஆயிரம் கொடுத்து என்னை மெயின்டெய்ன் பண்ணிக்க கோரிக்கை வைத்தார்" என்று கூறினார்.

   'நடிகை விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது' என்று சீமான் நேற்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதற்கு கண்ணீர் மல்க நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.