ஃபேமிலி ரெஸ்டாரண்ட் என்கிற பெயரில் பலான சரக்கு!

ஃபேமிலி ரெஸ்டாரண்ட் என்கிற பெயரில் பலான சரக்கு!

 அருண் ஹென்றிக்ஸ்,

 பெயருக்குத்  தான் ஃபேமிலி ரெஸ்டாரண்ட்? ஆனால் உள்ளே பூரா சரக்கு மயம் தான்.

  இது குறித்த விவரம் வருமாறு,

 திருப்பூர் மாநகரம், அவிநாசி ரோடு, பெரியார் காலனி கருப்பராயன் கோவில் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் தேன்நிலவு ஃபேமிலி ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் ஒரு ஓட்டல் உள்ளது.

 பெயரை பார்க்க எவ்வளவு பவ்யமாக உள்ளதோ, அதற்குள் சென்றால் அத்தனையும் உல்டாதான்.

 அந்த ரெஸ்டாரண்டில் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் போலி மது பாட்டில்கள் விற்பனை செய்யபடுகின்றன.

 நைன்டி சரக்கடித்தாலே குப்பென்று போதை தலைக்கு ஏறும் அளவுக்கு அங்கு தரம் உள்ளதால், இளம் மொட்டுக்கள் அந்த ரெஸ்டாரண்டை மொய்க்கிறார்கள்.

   அந்த ஓட்டலில் திண்பண்டங்கள் டவுள் ரேட்டுக்கு விற்பதோடு போதையேறி மட்டையான பார்டிகளின் ஜொபிக்குள் கையைவிட்டு பணத்தை பறித்துவிடுகிறார்களாம்.

  இந்த சங்கதிகள் உள்ளூர் கலால் பார்டிகளுக்கு தெரியும்! ஏன்னா அவுங்களும் இதுல கூட்டாளிகள் தானே?

 ஆகவே திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேன்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.