கடந்த ஆட்சியின் ‘சூப்பர் சி.எம்.’ பெண் ஐஏஎஸ் அதிகாரி யார்?
செய்தி:ம.பா.கெஜராஜ்,
கடந்த ஆட்சிக் காலத்தில் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரி, ‘சூப்பர் சி.எம்.’ என்ற அளவுக்கு அதிகாரம் செலுத்தி வந்ததாகவும், அவர் தலையிடாத துறையே இல்லை என்றும் அப்போதே அதிகார வட்டாரங்களில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் அம்மன் பெயரைக் கொண்ட அந்த அதிகாரியை மையமாக வைத்தே, கடந்த ஆட்சியாளர்களின் அதிகாரக் கட்டமைப்பை அசைக்கும் வகையில் தற்போதைய அதிகார வர்க்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இது வெறும் யூகத்தின் அடிப்படையிலான தகவல் அல்ல என்றும், அதற்கான ஆவண ஆதாரங்கள் இருப்பதாகவும் அதிகார வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், அந்த அதிகாரி தொடர்பாக வெளிநாட்டுச் சொத்துகள் குறித்தும் விசாரணை அல்லது நடவடிக்கை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது
இந்தப் பின்னணியில், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் போலி புத்தகக் கொள்முதல் விவகாரத்திலும், சம்பந்தப்பட்ட கொள்முதல் நடவடிக்கைகளில் அந்த அதிகாரியின் உத்தரவு முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கோணத்தில் கிடைத்துள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் அந்த அதிகாரியின் பங்கு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டால், கடந்த ஆட்சியின் நிர்வாகச் செயல்பாடுகள் தொடர்பான விசாரணையில் இது முக்கியத் திருப்பமாக அமையலாம்.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் கிடைக்க வேண்டியுள்ளது. விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் மேலும் பல விவரங்கள் வெளிவருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

admin
