குட்டி சிவகாசி காக்கி அலுவலகத்தில் அதிகாரம் - வசூல்...யார் அந்த பெண் சார்?

 குட்டி சிவகாசி காக்கி அலுவலகத்தில் அதிகாரம் - வசூல்...யார் அந்த பெண் சார்?

த.நெல்சன்,

வெயில் மாவட்டம், குட்டி சிவகாசியில் பணிபுரியும் காக்கிகள் குமுறிக் கொண்டிருக்கிறார்களாம். அங்குள்ள சப்டிவிஷன் அதிகாரியின் பெயரால் ஒரு அம்மணி கலெக்ஷன் செய்து வருவதே அதற்கு காரணமாம்.

 மேற்படி டிவிஷனில் உள்ள ஒரு அதிகாரி தன்னை மிகவும் நல்லவர் போல் காட்டிக் கொள்வதில் வல்லவராம். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை என்று உடன் உள்ள காக்கிகள் தெரிவிக்கின்றனர்.

 அன்பளிப்புகளை அவர் வாங்குவதற்கு பதிலாக ஒரு பெண் வசூல் செய்கிறாராம். அந்த அம்மணிக்கும்  அந்த அலுவலகத்துக்கும் எந்த சம்மந்தமுமே கிடையாதாம். அவர் துறையைச் சேர்ந்தவர் இல்லாத போது காக்கி அலுவலகத்துக்கே வந்து கலெக்ஷன் செய்து அதிகாரம் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

  அதுமட்டுமில்லாமல் யாருக்கெல்லாம் எங்கெல்லாம் பணி என்பதையெல்லாம் கூட அவர் தான் முடிவு செய்வதாக மூத்த காக்கிகள் குமுறுகின்றனராம்.

   இது தொடர்பாக மாவட்ட அதிகாரியின் பார்வைக்கு தகவல் தெரிய வந்த நிலையில், நிலைமை சீர்படுத்தப்படும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி காக்கிவாசிகள்.

 அது சரி....