கோடிகளில் வரி ஏய்ப்பு செய்யும் பேர்னாம்பட்டு ஆசாமிகள்! அப்பாவி கூலி தொழிலாளிகளுக்கு நோட்டீஸ்!
ஜி.கே.சேகரன்,
ரூ.5 கோடி வரி கட்டக் கூறி முதியவருக்கு வந்த ஜி.எஸ்டி. நோட்டீஸ் மனைவியின் பென்ஷன் கிடைக்காமல் தவிக்கும் முதியவர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மளிகை தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் வேலாயுதம், காலனி தொழிற்சாலையில் கூலியாக பணிபுரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது மனைவி உஷா காலனி தொழிற்சாலையில் பணி புரிந்ததற்காக அவருக்கு பி.எப் படியில் இருந்து மாதந்தோறும் பென்ஷன் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
நாளைடைவில் உஷா இறந்துவிட்ட நிலையில் அவரது பி.எப் பணத்தை கணவர் வேலாயுதம் பெற்று வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பென்ஷன் தொகை வராமல் இருந்ததால், நேரடியாக வங்கிக்கு சென்று கேட்டபோது,உங்களுக்கு 1.5 கோடி ரூபாய் ஜி.எஸ்டி வரி பாக்கி உள்ளது அதனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதுஎன்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது திகைத்த முதியவர், வேலாயுதம் வேலூரில் உள்ள ஜி.எஸ்டி அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது,உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து அதன் நகலை கொண்டு வாருங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து வேலாயுதம் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, காவல்துறையினர் புகாரை பெற மறுத்து,இது பொருளாதார குற்றப்பிரிவு அல்லது சென்னையில் உள்ள ஜி.எஸ்டி அலுவலகத்தில் தான் விசாரிக்கப்படும் வழக்கு"என்று கூறி திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளனர்.
தனது புகாரை பெற்றுக் கொண்டு உரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, தனது பென்ஷன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என முதியவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தொடர்ந்து,திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இதுபோன்ற கூலி தொழிலாளிகளின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி, அவர்களது பெயரில் நிறுவனங்களை தொடங்கி ஜி.எஸ்டி வரி ஏய்ப்பு செய்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்துவருகின்றன.
ஆனால் காவல்துறையினரோ அல்லது உரிய அதிகாரிகளோ புகார்களை பெறாமல் பாதிக்கப்பட்டவர்களை அலைக்கழிப்பதால், மக்கள் பெரும் மனவேதனை அடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற ஆவண மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்படிப்படட்ட மோசடிகளில் வேலூர் மாவட்டம் பேர்னாம்பட்டு நகரைச் சேர்ந்த பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
ளவர்களுக்கு சம்மந்தப்பட்ட வரிதுறை அதிகாரிகள் சிலரும் இதற்கெல்லாம் உடந்தையாக இருக்கக்கூடுமா என யோசிக்கத்தோன்றுகிறது.
குறிப்பு:- இந்த மோசடி வேலை செய்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காகவே பெரிய ரவுடி டீமே அங்கு உள்ளது.

admin
