பெண்ணின் உடலை ஊர்வலமாக இழுத்துச் சென்ற ஹமாஸ் தீவிரவாதிகள்!

ம.பா.கெஜராஜ்,
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலில் 600 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும் இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 260 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஷானிலூக் என்பவரும் ஒருவர். அவர் இறந்ததை தெரியாத அவரது தாய் தனது மகளின் புகைப்படத்தை கையில் ஏந்தி வைத்து கொண்டு மகள் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் என்றூ கவலையுடன் கேட்டு வருகிறார்.
அதே நேரத்தில் இஸ்ரேல் தெருவில் ஜெர்மன் இளம்பெண்ணான லூக்கின் உடலை நிர்வாண கோலத்தில் வண்டியில் வைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இழுத்து செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இஸ்ரேல் மற்றும் காசா எல்லையையொட்டிய கிராமப்புற பண்ணை நிலத்தில் கடந்த சனிக்கிழமை நோவா திருவிழா நடந்துள்ளது. அமைதி வேண்டி அதற்காக நடத்தப்பட்ட இசை திருவிழாவில் ஷானி லூக் தோழியுடன் சென்று கலந்து கொண்டுள்ளார்.
இதில், அவர்கள் நடனம் ஆடி, உணவு உண்டு, குடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திடீரென ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனரஅவர்கள் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி, தாக்குதல்களை நடத்தி, அதிர்ச்சி ஏற்படுத்தினர்.
இந்த தாக்குதல் நடந்ததும், இசை திருவிழாவில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் அலறியடித்தபடி ஓடியுள்ளனர். அவர்களில் ஷானி லூக்கும் ஒருவர்.
இந்நிலையில், இறந்த லூக் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் என்று கருதிய ஹமாஸ் பதங்கரவாதிகள் நிர்வாண கோலத்திலான உடலை ஜீப் ஒன்றின் பின்புறம் வைத்து ஓட்டி சென்றனர். அந்த உடலின் மீது சிலர் எச்சிலை துப்பினர்.
அந்த இளம்பெண், இஸ்ரேல் ராணுவத்தின் வீராங்கனை என பயங்கரவாதிகள் கூறினர். ஆனால், அவர் இளம்பெண் லூக் என்பது பின்னர் தெரிய வந்துள்ளது.
லூக்கின் உடலை இஸ்ரேல் தெருக்களின் வழியே, பயங்கரவாதிகள் வண்டியில் எடுத்து செல்லும் காட்சிகள் கொடூரமாக உள்ளது.