போட்டோ எடுக்காதீங்க சார்! கதறி அழுத கொள்ளையன்!

போட்டோ எடுக்காதீங்க சார்! கதறி அழுத கொள்ளையன்!

ஜி.கே.சேகரன்,

சங்கிலி பறித்த அரை மணிநேரத்தில் பிடித்த போலீஸ், கடனுக்காக இப்படி செஞ்சிட்டென் சார்... என்ன விட்டுடுங்க சார் என கொள்ளைக்காரர் கெஞ்சியதால் பரபரப்பு

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த விஷமங்களம் பகுதியை சேர்ந்த நதியா (27) என்ற பெண் பெங்களுருவில் உள்ள தனது உறவினரை பார்த்து விட்டு பெங்களூரு - ஜோலார்பேட்டை பேசஞ்சார் ரயிலில் பயணம் செய்து உள்ளார்.

   அப்போது ஜோலார்பேட்டை சந்திப்பு வரும் முன்பு சோமநாயக்கன்பட்டி ரயில் நிறுத்தத்தில் ரயில் நின்று உள்ளது. அப்போது மர்ம நபர்கள் இரண்டு பேர் நதியா கழுத்தில் அணிந்து இருந்த 1 சவரன் சயினை பறித்து கொண்டு தப்பி ஓடி உள்ளனர்.  

   இதனால் செய்வதறியாது தவித்த நதியா இது குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  புகாரின் பேரில் போலிசார் விசாரணை நடத்தி உடனடியாக அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்து 1 மணி நேரத்தில் 2 பேரை போலிசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதினர்.   

  அதில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பங்காருபேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஜெய் அசிவின் (எ) ஜோன் என்ற சிறுவன் 10 ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு கொள்ளையடிப்பதை தொழிலாக ஆரம்பித்து உள்ளான்.

  இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (30) என்ற வாலிபர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து சரியாக வேலைக்கு போகாமல் இருந்து உள்ளான். இந்நிலையில் அந்த சிறுவன் வேலை பணம் எல்லாம் ஒன்னும் பெருசு இல்ல என் கூட வா என்று அழைத்து சென்று கொள்ளையில் ஈடுபடுத்தி உள்ளான்.

 கடந்த மாதம் ஒரு கொள்ளை சம்பவம் செய்து அந்த நகையை அடகு வைத்து இருவரும் ஜாலியாக செலவு செய்து ஊர் சுற்றி உள்ளனர்.

  கடன் அதிகம் உள்ள சதீஷ் ஏதாவது சம்பவம் செய்யலாம் வாடா என்று அழைத்து கொண்டு ரயிலில்  பங்கார்பேட்டையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி பயணம் செய்துள்ளனர்.

  அப்போது பெண் கழுத்தில் இருந்த நகையை நோட்டமிட்டு கழுத்தில் இருந்த சயினை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தது அம்பலம் ஆனது.

 இந்நிலையில் அவர்களை சிறைக்கு அனுப்பும் முன்பு போலிசார் போட்டோ எடுத்த போது சார் சார் கடனுக்காக இப்படி செய்து விட்டேன் சார் நான் இனிமே இப்படி செய்ய மாட்டேன் என்னை விட்டு விடுங்கள் சார் என்று சதிஷ் கெஞ்சி அழுதார்.

  அப்போது நிலைய காவல் உதவி ஆய்வாளர் முத்து கிருஷ்ணன் என்ன இதுக்குடா வந்த எவன் தாலியாவது அறுக்குறது இங்க வந்து அழுகுறியா நில்லு டா என்று போட்டோ எடுத்து கொண்டனர்.

  மேலும் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்து இருவரிடம் இருந்த 2 சவரன் தங்க சயினை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.