வடிவேலு படம் போட்ட குப்பை தொட்டி விளம்பரம்! நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்... கவுன்சிலரின் குசும்பு!

ஜி.கே.சேகரன்,
வார்டில் குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன் என வடிவேல் புகைப்படத்துடன் போர்டு வைத்து வார்டு கவுன்சிலர் குசும்பு செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் நாலாவது வார்டு கவுன்சிலராக கௌரி ஐயப்பன் உள்ளார். இந்த நிலையில் நாலாவது வார்டில் அனைவரையும் கவரும் வண்ணம் ஒரு போர்டு வைத்துள்ளார்.
அதில் திருப்பத்தூர் நகராட்சி இந்த இடத்தில குப்பை கொட்ட நீயும் வர கூடாது நானும் வரமாட்டேன். இப்படிக்கு திருப்பத்தூர் நாலாவது வார்டு என குறிப்பிட்டிருக்கிறார்.
பொதுமக்களுக்கு சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த போர்டை வைத்து அதில் நகைச்சுவை நடிகர் வடிவேல் புகைப்படத்தையும் வைத்துள்ள நிலையில் இது பலரையும் கவர்ந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.