இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!

ஜி.சாந்தகுமார்,
அங்காடி தெரு, காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன் உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. மேலும், இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் குடும்பத்துடன் சென்ன டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் லாரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, வரும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.