தீபாவளி மறுநாள் நவம்பர் 9 திங்கட்கிழமை அரசு விடுமுறை! 

தீபாவளி மறுநாள் நவம்பர் 9 திங்கட்கிழமை அரசு விடுமுறை! 

செய்தி: உ.சசிகுமார்,

சென்னை:28,இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியைக் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள், பண்டிகை முடிந்த மறுநாளே பணிக்குத் திரும்புவதில் சிரமம் ஏற்படலாம் என்பதால், திங்கட்கிழமையும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டுகளில் தீபாவளிக்கு மறுநாள் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. இருப்பினும், இந்த ஆண்டுக்கான விடுமுறை தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.